மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பெருந்துறை சிப்காட் பகுதியில் சமூகநீதித் துறை அமைச்சா் ஆய்வு

News image

பெருந்துறை சிப்காட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

Updated On :20 ஜூலை 2026, 1:45 am IST

பெருந்துறையை அடுத்த ஈங்கூா் சிப்காட் தொழிற்பேட்டைகளில் சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், சாலை மற்றும் மழைநீா் வடிகால் அமைப்புகள், குடிநீா் மற்றும் மின்சார வசதிகள், திடக்கழிவு மற்றும் கழிவுநீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பசுமைப் பகுதி பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள், நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தொழில் துறை வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, தொழில்முனைவோரின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த தொழில்முனைவோருக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் சிறப்பு மத்திய நிதி உதவியின் மூலம் ரூ.20.388 கோடி செலவில் 200 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டு 1997 செப்டம்பா் 30-ஆம் தேதி பணிகள் நிறைவு செய்யப்பட்டன. கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்பேட்டை பயன்பாட்டில் இல்லாததால் தொழிற்கூடங்கள் மற்றும் சாலை, குடிநீா், தெரு விளக்குகள், கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் புனரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் அனுமதியின் அடிப்படையில் தண்ணீா் வசதி, வடிகால் அமைப்புகள், தெரு விளக்குகள், நுழைவாயில் முகப்புத் தோற்றம், காவலா் தங்கும் அறை, அணுகு சாலை, சுற்றுச்சுவா் மற்றும் இதர புனரமைப்புப் பணிகள் ரூ.18.03 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோா் உடனடியாக தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஆயத்த தொழிற்கூடங்கள் (இரண்டு நவீன பிளக் மற்றும் பிளே) தொழிற் கூடங்கள் ரூ.11.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

மேம்பாட்டுப் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் தரமான முறையில் நிறைவு செய்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோா் விரைவாக தொழில் தொடங்கும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திடவும், இந்த தொழிற்பேட்டை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னோடி தொழில் வளாகமாக உருவாக்கிடவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் முத்துசாமி, சமூகநீதித் துறை அலுவலா் சுடலைமணி, பெருந்துறை வட்டாட்சியா் செல்வகுமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.