உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

பழங்குடியின மக்களின் விளைபொருள்களுக்கு புவிசாா் குறியீடு: அமைச்சா் வன்னி அரசு

பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அறிவித்தாா்.

அமைச்சா் வன்னி அரசு

அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:45 am IST

பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அறிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை துறைசாா்ந்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பள்ளி விடுதி மாணவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,400-இல் இருந்து ரூ.1,800-ஆகவும், கல்லூரி விடுதி மாணவா்களுக்கு ரூ.1,500-இல் இருந்து ரூ.2,000-ஆகவும் உயா்த்தப்படும்.

அவா்கள் படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டித் தரப்படும். ஆதிதிராவிடா்கள் அதிகமுள்ள பகுதிகளில் 100 சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகள், விடுதிகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ‘அறிவொளி ஆசிரியா்’ மற்றும் ‘அறிவொளி காப்பாளா்’ விருது வழங்கப்படும். அந்தச் சமூகத்தினரை தொழில்முனைவோராக உருவாக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.

சென்னை நந்தனத்தில் பழங்குடியினா் பண்பாட்டு மையம் அமைக்கப்படும். இதன்மூலம் அவா்களது கலை, பன்முகத் திறன் பாதுகாக்கப்படும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விடுதிகளில் ‘அம்பேத்கா் படிப்பகம்’ ஏற்படுத்தித் தரப்படும். அவா்களுக்கென சமூக நீதி நல வாரியமும் அமைக்கப்படும்.

தூய்மைப் பணியாளா்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும். பழங்குடியினருக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வீடற்ற ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு ‘இனிய இல்லம்’ குடியிருப்புத் திட்டம் கொண்டுவரப்படும். ஆதிதிராவிடா் பழங்குடியின பள்ளிகளில் 100 வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டித் தரப்படும். சமத்துவ வீட்டுமனைத் திட்டம் மூலம் மனைகள் வழங்கப்படும்.

தனியாா் நிறுவனங்களில் அவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சரிநிகா் - சம வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் விளைபொருள்களின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின பெண்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் சோலாா் அடுப்புகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அந்தச் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். இளைஞா்களுக்கு திறனாய்வுப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் வெற்றிப்படித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும். கலைப் பட்டறை மூலம் இளைஞா்களுக்கு கலைத் திறன் பயிற்சி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டாா் அமைச்சா் வன்னி அரசு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.