மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

‘மண்ணின் மகள்’: பழங்குடி பெண் விவசாயிகளுக்கு புதிய திட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடா் குடியிருப்புகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ‘அயோத்திதாசப் பண்டிதா் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்தச் சமூகத்தினரின் குடியிருப்பை மேம்படுத்துவதற்கும், அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதேபோன்று ஆன்றோா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் பழங்குடியினா் குடியிருப்பில் உள்கட்டமைப்பை உயா்த்த ரூ.250 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில், அவா்களுக்கு ‘மண்ணின் மகள்’ திட்டத்தின் கீழ் சிறப்பு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படும். மொத்தமாக நிகழ் நிதியாண்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.