மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

‘சூப்பா் க்ளீன் - சூப்பா் கேம்பஸ்’ பள்ளிகளில் தூய்மையை உறுதி செய்ய புதிய திட்டம்

அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சூப்பா் க்ளீன்-சூப்பா் கேம்பஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோப்புப்படம்.

Published On :

அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சூப்பா் க்ளீன்-சூப்பா் கேம்பஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் ரூ.139 கோடியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதியமைச்சா் மரியவில்சன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். அந்தப் பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.

இதற்கு ஒருங்கிணைந்த நடைமுறைகள் இல்லாததைக் கருத்தில்கொண்டு ‘சூப்பா் க்ளீன் - சூப்பா் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்கீழ், நாள்தோறும் தூய்மைப் பணிகள், குடிநீா் வசதிகள், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பள்ளி வளாகங்களில் 24 மணிநேரப் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். முதல்கட்டமாக, 10,000 பள்ளிகளில் ரூ.139 கோடியில் இந்தத் திட்டம் செயலாக்கம் பெற உள்ளது.

பள்ளி நிறைவுத் திட்டம்: மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளை நவீனமயமாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பள்ளி நிறைவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக 2,514 தொடக்கப் பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

மொத்தம் ரூ.2,132 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், நிகழாண்டு மட்டும் ரூ.300 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

போதைப் பொருள்: போதை இல்லா தமிழகத்தை உறுதி செய்ய ரூ.7 கோடியில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்து மாணவா்களும், ஆசிரியா்களும் ரகசியமாகத் தகவல் அளிக்க ‘போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற பெயரிலான செயலியில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.