FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

புதுச்சேரியில் 3 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 10:11 pm IST

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தொடர்ந்து 2 ஆவது முறையாக என். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இதையடுத்து, கடந்த மே 13 ஆம் தேதி புதுச்சேரியின் முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக உடனான அமைச்சரவை பங்கீடு குறித்து முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல்வர் என். ரங்கசாமி மற்றும் 5 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து முழுமையான பட்டியல் இன்று (ஆக. 5) வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் என். ரங்கசாமி - நிதித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், போக்குவரத்து, வருமானவரித்துறை, இந்து அறநிலையத்துறை உள்பட 12 துறைகள் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளும்.

ஏ. நமச்சிவாயம் - உள்துறை, கால்நடை, வனத்துறை, மின்சாரம், கல்வி மற்றும் சட்டம் ஆகிய துறைகள்.

மல்லாடி கிருஷ்ணா ராவ் - பொதுப்பணி, சுற்றுலா, மீன்வளம், துறைமுகங்கள், தொழிற்சாலை மற்றும் வணிகம், தொழிலாளர் உள்ளிட்ட 6 துறைகள்.

பி. ராஜவேலு - ஆதிதிராவிடர் நலம், கலை மற்றும் கலாசாரம், வீட்டுவசதி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்பட 6 துறைகள்.

வி.பி. சிவக்கொழுந்து - பொது விநியோகம், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறைகள்.

ஜி.என்.எஸ். ராஜசேகரன் - வேளாண், விளையாட்டு, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட 6 துறைகள்.

Summary

Portfolios have been allocated to the ministers in the cabinet led by Puducherry Chief Minister N. Rangasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.