சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

60 நாள்களுக்குப் பின் ஆக.3-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ஆனால்..பட்டியல்?

ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகத் தகவல்...

News image

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் - ANI |கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:07 am IST

கர்நாடகத்தில், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதிய அமைச்சரவை முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, கடந்த ஜூன் 3 அன்று டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை முழுவதுமாக நிரப்பப்படாததால் பல்வேறு முக்கிய துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி, தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதில், தில்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகியவற்றால் கர்நாடக அமைச்சரவைப் பட்டியலுக்கு ராகுல் காந்தியின் ஒப்புதல் கிடைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவையின் விரிவாக்கம் 90 சதவிகிதம் வரும் திங்கள்கிழமை (ஆக. 3) நடைபெற்றுவிடும் எனவும், பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால், இதுவரை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இதுபற்றி, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கூறுகையில்,

“புதிய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியல் பெரும்பாலும் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவின்போதுதான் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

Summary

It has been announced that the new cabinet in Karnataka will be expanded on August 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.