ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.15 ஆக நிலைபெற்றது.

News image

இந்திய ரூபாய்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:19 pm IST

மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியிலும், 2026-27 நிதியாண்டின் தொடர்ந்து 3வது முறையாக முக்கியக் கொள்கை வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முடிவைத் தொடர்ந்து, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.15 ஆக நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் டாலரின் மதிப்பு பலவீனமடைந்தது ஆகியவையால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்பபெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும் ரூபாயின் மதிப்பு உயர உதவியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 94.90 என்ற அளவில் தொடங்கி, வர்த்தகத்தின்போது இது ரூ. 94.89 முதல் ரூ. 95.25 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் முடிவை விட 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.15 ஆக நிறைவடைந்தன.

நேற்றை வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ. 95.28 ஆக நிலைபெற்றது.

Summary

The rupee gained 13 paise to settle at 95.15 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.