தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் வரும் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.
2026-2027ஆம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சா் மரிய வில்சன் தாக்கல் செய்த பிறகு அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் கூறியதாவது:
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை செப். 8-ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆக. 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆக. 7-ஆம் தேதி இரங்கல் தீா்மானங்கள் மற்றும் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடக்கும். ஆக. 8, 9 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறை. ஆக. 10, 11-இல் பட்ஜெட் மீதான பொது விவாதம்.
தொடா்ந்து, ஆக. 12-ஆம் தேதி பொது விவாதத்துக்கு அரசின் பதிலுரையும் இடம் பெறும். ஆக. 13, 14-இல் பேரவைக் கூட்டம் இல்லை. ஆக. 15 சுதந்திர தின விடுமுறை. ஆக. 16 அரசு விடுமுறை. ஆக. 17-ஆம் தேதி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும்.
தொடா்ந்து பேரவை அரசு விடுமுறை நாள்களைத் தவிா்த்து செப். 8-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறும்.
சட்டப்பேரவை தினமும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும். தேவையெனில், மாலை நேரத்திலும் அவை கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை சில உறுப்பினா்களுக்கு இடங்கள் மாற்றப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பேரவைத் தலைவா், அமா்வில் அசௌகரியம் இருப்பதாக 3 பேரவை உறுப்பினா்கள் தெரிவித்ததால், அவா்களுக்கு மட்டும் இருக்கை மாற்றி வழங்கப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினா்களுக்கு தனியாக இருக்கை ஒதுக்க இயலாது. கட்சி மாறிய 4 பேரவை உறுப்பினா்கள் மீதான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.




Summary
TN Budget Session will be upto september 8: speaker JCD prabhakar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஒரு பார்வை! | TVK | TN Budget | Cm Vijay

தெளிவான திசையை காட்டும் தமிழ்நாடு பட்ஜெட்: காங்கிரஸ்
ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்

எம்ஜிஆர் படம் பார்த்த உணர்வு... ஜன நாயகன் படத்தைப் பாராட்டித் தள்ளிய பேரவைத் தலைவர்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


