தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விரைவில் முழு நிதிநிலை அறிக்கையை தவெக அரசு தாக்கல் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக, முதல்வா் விஜய் துறைவாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்தும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
Summary
A cabinet meeting led by Chief Minister Vijay has begun!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










