தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னா், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து, கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளது. இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கரம் நீட்டிய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 போ் இதில் இடம்பெற்றுள்னா்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பதவி ஏற்றபோது, அனைத்து துறைகளிலும் உள்ள நிதிநிலை விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்திருந்த சூழலில், இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோல், தவெக தோ்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் திமுகவின் ஆட்சியில் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
Summary
A cabinet meeting led by Chief Minister Vijay has begun!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!
முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்!
தமிழ்நாட்டில் மேலும் 23 அமைச்சர்கள் பதவியேற்பு! நேரலை

பதவியேற்ற முதல் நாளே..! கேரள முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்




