சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.
நாட்டின் சுதந்திர தினம் நாளை (ஆக. 15) கொண்டாடப்படுகிறது. அனைத்து அரசு அலுவலங்களிலும் விழா கொண்டாடுவதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வந்தே மாதரம் தேசியப் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, 'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga) பிரசாரத்தின் கீழ் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு, சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமி மையங்கள், மாவட்ட நீதித்துறை அலுவலகங்கள் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படும்.
இந்நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு இறுதியாகத் தேசிய கீதம் இசைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் சமீபமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதுசார்ந்த அலுவலகங்களில் சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தகவல் இல்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.

Summary
Tamil Thai Vazhthu missing from the Independence Day celebrations at the Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 5) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day




