FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ஆடி வெள்ளி: தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஆக. 14)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி....

News image

தங்கம், வெள்ளி விலை - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 10:17 am IST

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆக. 14) சவரனுக்கு ரூ. 1,440 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ. 1,600, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400, வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று (ஆக.14, வெள்ளிக்கிழமை ) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,440 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,320-க்கும் கிராமுக்கு ரூ. 180 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கும் விற்பனையாகிறது.

சமீபமாக கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today's Gold and silver rate in Chennai, tamilandu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.