சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 28) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு குறித்த எதிா்பார்ப்பு மற்றும் உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களகாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ரூ. 13,370-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ரூ. 1,06,960-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 28) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,720-க்கும் கிராமுக்கு ரூ. 155 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,215-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 1,240 per sovereign today (July 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)

தங்கம் விலை உயர்வு, வெள்ளி விலை?- ஜூலை 18 நிலவரம்!

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 14)

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (ஜூலை 7)
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




