குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பிகார், அசாம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ்; மற்ற மாநிலங்களிலும்...! சிஜேபி எச்சரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தகவல்...

News image

சௌரவ் தாஸ் - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 9:03 am IST

போராட்டம் நடத்திய பிகார், அசாம் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அந்த மாநில அரசுகள் உறுதியளித்துள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.

தில்லியில் கடந்த ஜூலை 20 அன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்ற சிஜேபியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்பின்னரே சிஜேபியின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

எனினும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராடிய மாணவர்களை கைது செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு சிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மாணவர்கள் கைது செய்யப்பட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய பிகார், அசாம் மாநில மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும் எழுத்துப்பூர்வமாக பிகார், அசாம் மாநில அரசுகள் உறுதியளித்துள்ளதாகவும் அறிவிப்பாணைகளின் நகல்களை அரசுப் பிரதிநிதிகள் தங்களிடம் பகிர்ந்துகொண்டதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுதல், எதிர்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருத்தல், தடுப்பில் வைக்கப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவித்தல் என அந்த அறிவிப்பாணையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களும் இந்த உத்தரவாதத்தை எங்களுக்கு நாளைக்குள் வழங்க வேண்டும் என்றும் எந்தவொரு இளைஞரையும் இந்தச் சூழலில் தனியாகப் போராட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

Cases against students from Bihar and Assam withdrawn: CJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.