தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

News image

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப்படம்)

Updated On :12 ஆகஸ்ட் 2026, 9:08 am IST

முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) விசாரணைக்கு வருகின்றன.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.

சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் அதிமுகவிலிருந்து ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ-வும், நிதி அமைச்சருமான மரியவில்சன், 2022 ஆம் ஆண்டில், சொத்து தகராறில் சகோதரர் மரியகுலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் இன்று ஆஜராகிறார்.

Summary

Key cases, including the election petition challenging the victory of Chief Minister Vijay, are coming up for hearing at the Madras High Court today (August 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.