ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

சென்னையில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா?

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுவது குறித்து...

Vijay | Amit Shah | DK Shivakumar

முதல்வர் விஜய் | அமித் ஷா | கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்

Published On :

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022-க்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் இந்த மாநாடு வருகிற ஆக. 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடகத்தின் டி.கே. சிவகுமார், தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர பிரதேச முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், இந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி விவகாரம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

South Indian Chief Ministers conference chaired by Home Minister Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.