மாணவர்களை சுட்டது யார்? என்ற கேள்விக்கு முதலில் பதிலளியுங்கள் என்று விவாதத்துக்கு அழைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று அமித் ஷா தெரிவித்த நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்?, பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, விவாதத்துக்கு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை தயாராக இருப்பதாகவும், யார் ஓடுகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து செய்தியாளர்களுடன் இன்று ராகுல் காந்தி பேசியதாவது:
”அமித் ஷாவின் கற்பனைகளைக் கேட்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவர் எங்களுக்கு விரிவுரை ஆற்றுவதிலோ அல்லது அவருடன் விவாதிப்பதிலோ எங்களுக்கு விருப்பமில்லை.
ஒரேவொரு எளிய விஷயத்தை மட்டும் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் ’நாங்கள்’ என்று குறிப்பிடுவது இந்த நாட்டின் இளைய தலைமுறையினரைத்தான்.
அந்த மாணவர்களைச் சுட்டது யார்? அந்த மாணவர்களைச் சுட உத்தரவிட்டது யார்? மாணவர்களில் ஒருவரின் கண்களைப் பறித்தது யார்? மாணவர்களில் ஒருவரைக் காதில் சுட்டது யார்? ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகளால் மாணவர்களை அடிக்க உத்தரவிட்டது யார்? அந்த உத்தரவைப் பிறப்பித்தது யார்? அந்த உத்தரவை உள்துறை அமைச்சகம்தான் செயல்படுத்தியது.
எங்கள் பிள்ளைகளைச் சுட அமித் ஷா உத்தரவிட்டாரா, இல்லையா? அவர் உத்தரவிட்டிருந்தால், அவர் குற்றவாளி என்பதால் பதவி விலக வேண்டும். அவர் உத்தரவிடவில்லை என்றாலும், அவர் திறமையற்றவர் என்பதால் பதவி விலக வேண்டும்.
கடந்த 20 நாள்களாக அமித் ஷா காணாமல் போயிருந்தார். உள்துறை அமைச்சருக்குத் துணிச்சல் இல்லை. அவரால் அவைக்கு வர முடியவில்லை” எனக் காட்டமாக பதிலளித்துள்ளார்.
Summary
We are not interested in listening to Mr Amit Shah's imagination - Who shot the students? Rahul demands an answer from Amit Shah!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரத் பவார் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் அருகருகே நின்றும் கண்டுகொள்ளாத ராகுல் - அமித் ஷா!

மாணவர்கள் மீது தடியடி! அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வந்த லைவ் அப்டேட்! - ராகுல் குற்றச்சாட்டு
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK




