காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

டிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைது

டிஜிட்டல் கைது செய்து 3 மாதங்களாக அடைத்து வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

Published On :

நாக்பூரில் டிஜிட்டல் கைது என்று கூறி, 16 வயது சிறுமியை மூன்று மாதங்களாக அறையில் அடைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெல்ட்டால் அடித்து, உடல் முழுக்க கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்திய 19 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

பெண்ணைக் காணவில்லை என்று பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தேடுதல் பணியை நடத்திய காவல்துறையினர், ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியும், உடல் முழுக்க கத்திக் காயங்களும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாக்பூர் சிறையில் இளைஞர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறுமியை அடித்துத் துன்புறுத்தப் பயன்படுத்தியது, நாய்களைக் கட்டுவதற்கான பெல்ட் என்று தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பை வளர்த்துவந்த சிறுமியை டிஜிட்டல் கைது பாணியில் மிரட்டி, தான் சொல்வதைக் கேட்க வேண்டும், இல்லையென்றால், சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று இளைஞர் மிரட்டி, கடத்தி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

Summary

Minor girl sexually assaulted; man arrested for holding her captive for three months.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.