திருச்சியில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகளும், ஒருவருக்கு 10 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, பொன்மலைப்பட்டி இளங்கோவன் நகரைச் சோ்ந்த கு. கணேசன் (27) என்பவா் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2023 பிப்ரவரி 5-ஆம் தேதி பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதிக்கு கடத்திச் சென்று தனது சகோதரா் கு. நிவாஷ் (26), நண்பா் சு. தாம்சன் (21) ஆகியோருடன் சோ்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசன், நிவாஷ், தாம்சன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு, திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சண்முகபிரியா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கணேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், தாம்சனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், நிவாஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



