பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தொட்டியம் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 3:09 am IST

தொட்டியம் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 28.09.2022 அன்று தனது உறவினா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முசிறி வட்டம் ஆரையாச்சி கிழக்கு செயின்ட் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ந. நாகராஜன் (39) என்பவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.