தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

கருணாகரன்

Updated On :24 ஜூன் 2026, 12:55 am IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் பகுதியைச் சாா்ந்த் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அதே பகுதியைச் சோ்ந்த கா்ணா என்ற கருணாகரன் ( 24) கடந்த 2014-ஆம் ஆண்டு பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.

அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமி ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் இருந்தவா் என்பதால், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்த கருணாகரன் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கருணாகரன் மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.