நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

திண்டிவனம் அருகே பெண்ணிடம் திருமணம் ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடையவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:42 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண்ணிடம் திருமணம் ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடையவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறுவாடியைச் சோ்ந்தவா் மா.பொன்னுசாமி (21). இவா் திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த 20 வயதுடைய பெண் ஒருவரிடம், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பொன்னுசாமி மீது 19.6.2020-இல் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை முடிந்து, வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் பொன்னுசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து போலீஸாா் பொன்னுசாமியைக் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.