மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசளிக்க உள்ளது பற்றி...

News image

தமிழ்நாடு தலைமைச் செயலகம். - கோப்புப்படம்.

Updated On :23 ஜூன் 2026, 9:32 pm IST

2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த தமிழ் நூல்களுக்கான தமிழ்நாடு அரசின் பரிசுகளைப் பெற எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மொழியின் வளத்தையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் "சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை" செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் 2025, ஜூன் 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை) சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், உடலியல், நலவியல், தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்), சமயம், ஆன்மிகம், அளவையியல், கல்வியியல், உளவியல், வேளாண்மையியல், கால்நடையியல், சுற்றுப்புறவியல், கணினியியல், நாட்டுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு, பிற சிறப்பு வெளியீடுகள், விளையாட்டு, மகளிர் இலக்கியம் ஆகிய தமிழர் வாழ்வியல் 33 வகைப்பாடுகளின் வழியாக பரிசுப் போட்டிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ. 50,000, அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ. 25,000 என பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (tamilvalarchithurai@tn.gov.in) விலையேதுமின்றிப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கப்பெறலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு: 044-28190412 / 28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

Writers can apply for the Tamil Nadu government awards for the best Tamil books published in 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.