தமிழ்நாடு மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்ததால்தான் பெங்களூர் பயணத்தை திட்டமிட்டேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், குறுவை சாகுபடியால் விவசாயிகள் பாதிப்பு, முதல்வரின் பெங்களூர் பயணம் உள்ளிட்டவை குறித்தும் விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் விஜய் பேசியதாவது:
”காவிரி நமக்கு உயிர் ஆதாரம். உணர்வு ரீதியான ஒன்று. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணமும், அவசியமும் இல்லை. மேக்கேதாட்டு விவகாரத்தில் அனைவரும் இணைந்து இயற்றிய தீர்மானத்தை பிரதமருக்கு கடிதமாக அனுப்பி வைத்துள்ளோம். மாநிலங்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் முழு விவரத்தை குறிப்பிடாத நிலையில், முழு விவரத்தை குறிப்பிட்டு மறுநாளே பிரதமருக்கு கடிதம் எழுப்பினோம்.
காவிரி நதி நீர் பங்கீட்டிலும், மேக்கேதாட்டு அணை கட்டுவதிலும் தமிழ்நாட்டின் உரிமையை நம் அரசு விட்டுக் கொடுக்காதது. கர்நாடகத்தில் சில அணைகள் கட்ட தொடங்கியது பற்றி இதே அவையில் 1969-ல் விவாதம் நடைபெற்றது. அப்போது நீர்வளத் துறை அமைச்சர் யார்? அணை கட்டவிட்டது யார்? என்ற அரசியல் செய்யப் போவதில்லை.
காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். யார் ஆள்வது, யாருக்கு பெருமை என்றெல்லாம் பார்க்கக் கூடாது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை.
கர்நாடகத்துக்கு சென்று பேசிப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன். பெங்களூரு செல்ல நினைத்தது பற்றி பல கருத்துகள் வந்தது. நேர்மறையாக எதாவது நடந்தால் நல்லது என நினைத்தேன். இன்றைய காலத்தில் பகை நாடுகளே பேச்சுவார்த்தை நடத்தும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசினால் என்ன? என்று நினைத்தேன். அந்த முயற்சியில் அவமானம் நடந்தால் என்ன செய்வது எனக் கேட்டார்கள்? தமிழ்நாடு மக்களுக்கு அதற்கும் தயாராக இருந்தேன்.
குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்குவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார். அதனை ஏற்கெனவே வழங்கிவிட்டோம். அரசியலே நாங்கதான் என சொல்பவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது. பேப்பர் படித்திருந்தால் நாட்டு நிலவரம் தெரிந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு தொகுப்புதான் அரசு வழங்கியது. அது அனைத்து அரசும் வழங்குவதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம். நாள்தோறும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிகள், விவசாயிகளுடன் பேசி கருத்தை கேட்க வேண்டும் என்றார்.
Summary
Ready to face humiliation for the people of Tamil Nadu - Vijay on Bengaluru visit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு நாள்! முதல்வர் விஜய் வாழ்த்து

உ.பி. டூ தமிழ்நாடு... முதல்வர் விஜய் தளபதியை சந்திக்க 24 வயது இளைஞர் நடைப்பயணம்!
தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதி

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


