பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 1:36 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரம்பலூா் மாவட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், பொன்னுசங்கம்பட்டி அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை, பெரம்பலூா் மாவட்டம் நக்கசேலம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த ஆ. மருதை (26) என்பவா் காதலிப்பதாகக் கூறி கடந்த 21.09.2021 அன்று கடத்திச் சென்று, நக்கசேலம் கிராமத்தில் உள்ள கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்தாராம். பின்னா் சிறுமியை மருதை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜம்புநாதபுரம் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, மருதையை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில்,

மருதைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.