தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரின் மகள் சுப்ரியா சுலேவின் மகள் ரேவதி சுலே மற்றும் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங் லக்கானி ஆகியோருக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இவர்களது திருமண வரவேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அரசியலைத் தாண்டி முக்கிய தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரஃபுல் படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
à¤à¤ दिलà¥à¤²à¥ मà¥à¤ राषà¥à¤à¥à¤°à¤µà¤¾à¤¦à¥ à¤à¤¾à¤à¤à¥à¤°à¥à¤¸ पारà¥à¤à¥ (शरदà¤à¤à¤¦à¥à¤° पवार) à¤à¥ à¤à¤¾à¤°à¥à¤¯à¤à¤¾à¤°à¥ à¤à¤§à¥à¤¯à¤à¥à¤·à¤¾ à¤à¤° लà¥à¤à¤¸à¤à¤¾ साà¤à¤¸à¤¦ @supriya_sule à¤à¥ à¤à¥ सà¥à¤ªà¥à¤¤à¥à¤°à¥ à¤à¥ विवाह à¤à¥ à¤à¤ªà¤²à¤à¥à¤·à¥à¤¯ मà¥à¤ à¤à¤¯à¥à¤à¤¿à¤¤ समारà¥à¤¹ मà¥à¤ शामिल हà¥à¤à¤° नव-दà¤à¤ªà¤¤à¥à¤¤à¤¿ à¤à¥ सà¥à¤à¥, समà¥à¤¦à¥à¤§ व सफल वà¥à¤µà¤¾à¤¹à¤¿à¤ à¤à¥à¤µà¤¨ à¤à¥ शà¥à¤à¤à¤¾à¤®à¤¨à¤¾à¤à¤ दà¥à¤ à¤à¤µà¤ परिà¤à¤¨à¥à¤ सॠमिलà¤à¤° à¤à¤¨à¥à¤¹à¥à¤ बधाठदà¥à¥¤ pic.twitter.com/gynGhQwmAS
— Deepender Singh Hooda (@DeependerSHooda) August 10, 2026
அரசியலில் எதிரெதிராக செயல்பட்டாலும், வரவேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடாவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கைகுலுக்கிக் கொண்டனர். அதேவேளையில், சோனியா காந்தி சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் நலம் விசாரித்துக் கொண்டனர்.
அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, சிராக் பாஸ்வான், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோருடன் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், எஸ். ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி மற்றும் பி.டி. உஷா ஆகியோரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தியின் அருகிலேயே தனது கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாலும், இருவரும் கைக்குலுக்கவோ, பேசிக்கொள்ளவே இல்லை. இவர்களது விடியோக் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Summary
The high-profile wedding reception of NCP (SP) MP Supriya Sule’s daughter on Monday night offered a rare political sight as Union Home Minister Amit Shah and Leader of the Opposition Rahul Gandhi were seen in the same frame.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

மாணவர்கள் மீது தடியடி! அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வந்த லைவ் அப்டேட்! - ராகுல் குற்றச்சாட்டு
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



