குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

யூடியூபில் விடியோவை இனி ஈஸியாக தேடலாம்!

யூடியூபில் தேவையான விடியோவை எளிமையாகத் தேடும் புதிய அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது குறித்து...

News image

யூடியூப் - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 5:27 pm IST

யூடியூபில் தேவையான விடியோவை இனி எளிமையாகத் தேடலாம். இதற்காக 'ஆஸ்க் யூடியூப்' என்ற புதிய அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

யூடியூபில் இதுவரை விடியோக்களைத் தேட வேண்டுமென்றால், நாம் தேடும் வார்த்தையை டைப் செய்து, விடியோக்களை ஸ்க்ரால் செய்து தேவையான விடியோக்களை தேர்வு செய்வதே வழக்கமாக இருந்தது வந்தது.

ஏனெனில் நாம் உள்ளீடு செய்த வார்த்தையைக் கொண்டு சரியான விடியோவை முதன்மையிலேயே கொண்டுவந்து தருவது யூடியூபிற்கு சிரமமானதாகவே இருந்தது.

ஆனால், தற்போது ஏஐ (செய்யறிவு) உதவியுடன் தேடுபொறியை எளிமையாக்கியுள்ளது யூடியூப். ஏஐ உதவியுடன் தேடல் வசதியை மேம்படுத்திவரும் யூடியூப், ஆஸ்க் யூடியூப் (Ask Youtube) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்கள் வார்த்தையை உள்ளீடு செய்து தேடும்போது வலது பக்கத்தில் ஆஸ்க் யூடியூப் என்ற அம்சம் தோன்றும். அதனை கிளிக் செய்து எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விடியோக்களை தேடலாம்.

ஆஸ்க் யூடியூப் அம்சம்

ஆஸ்க் யூடியூப் அம்சம் - எக்ஸ்

அவ்வாறு தேடுவதால், விடியோக்கள் மட்டுமின்றி விரிவான விளக்கத்துடன் கூடிய தகவல்களையும் பரிந்துரை செய்யும். இதனால் நாம் தேடும் விடியோவை எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.

உதாரணமாக ஒரு இடத்தைப் பற்றித் தேடினால், அந்த இடத்தின் வரலாறு, பாதை, சிறப்புகள் என பல்வேறு கூடுதல் தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரே இடத்தில் கிடைக்கும்.

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி செய்யறிவு உதவியுடன் யூடியூப் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு தளங்களுக்கு ஜெமினி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், யூடியூப்பும் முழுமையாக ஜெமினியை பயன்படுத்தி பயன்பாட்டை எளிமையாக்கியுள்ளது.

அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Googles Ask YouTube Finds the Exact Part of a Video That Answers Your Question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.