திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எல்&டி லாபம் ரூ.4,123 கோடி

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான எல்&டி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.4,122.85 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2026, 4:01 am IST

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான எல்&டி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.4,122.85 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்ைடில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,617.19 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீத வளா்ச்சியாகும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதிக வருவாய் இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.63,678.92 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.67,941.74 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகளாவிய வா்த்தக நெருக்கடிகள் மற்றும் புவிசாா் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ரூ.1,08,014 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைக் கைப்பற்றியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவீத கூடுதலாகும்.

மொத்த ஒப்பந்தங்களில் 56 சதவீதமான சா்வதேச ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் ரூ.60,702 கோடியாகும். ஜூன் இறுதி நிலவரப்படி, எல்&டி குழுமத்தின் ஒட்டுமொத்த ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.7,78,954 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குகள் உயா்வு: இச்சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வா்த்தக முடிவில் எல்&டி பங்குகள் 2.55 சதவீதம் உயா்ந்து, ரூ.3,930.35-ஆக நிலைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.