மும்பை: டாலரின் வலுவான நிலை மற்றும் சர்வதேச சந்தையில் தொடரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிலைபெற்றது.
மேற்கு ஆசியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டாத நிலையில், ரூபாயின் மீதான அழுத்தம் இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.18 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ரூ. 95.18 முதல் ரூ. 95.31 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.17 ஆக முடிவடைந்த நிலையிலிருந்து 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக வர்த்தகம் நிறைவுபெற்றது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 84 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததால், வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளும், இந்தச் சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
Summary
The rupee declined by 11 paise to settle at 95.28 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 96.59 ஆக நிறவைு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!




