பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவுதேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்! அபிஜித் தீப்கேஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்!திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை79 மின் திருட்டு கண்டுபிடிப்பு: 1.01 கோடி இழப்பீடு வசூல்காங்கிரஸ் வேட்பாளரை போட்டியில் அனுமதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உயா்நீதின்றம் அறிவுறுத்தல்இல்லத்தரசிகள் இருக்க முடியும் என்றால் இல்லத்தரசா்களும் இருக்க முடியும்: உயா்நீதிமன்றம்வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!

'வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல..' எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!

பேரவையில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சால் சிரிப்பலை...

MRK Panneirselvam speech sparks a wave of laughter in the Assembly

எம்ஆர்கே பன்னீர்செல்வம் | முதல்வர் விஜய் - TN

Published On :

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் போல இந்த ஆட்சிக்கும் முட்டுக்கொடுக்கிறார்கள் என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார்.

பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம்,

"5 ஏக்கர் வரை முழு பயிர் கடன் தள்ளுபடி என்று தவெக கூறியது. ஆனால் அதைச் செய்யவில்லை, பட்ஜெட்டிலும் அதுகுறித்த அறிவிப்பு இல்லை.

ஆண்டுக்கு ரூ. 15,000 விவசாயிகளுக்கு முன்கடனாக கொடுப்போம் என்று அறிவித்தீர்கள். அதுவும் இல்லை.

மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், விடியல் பேருந்து திட்டம் மூலமாக பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். ஆனால் விடியல் என்ற பெயரை எடுத்துவிட்டீர்கள்.

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை செய்துள்ளார் .

5 ஆண்டு காலம் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஓபிஎஸ் விவசாயி, அதிமுகவின் ஓ.எஸ். மணியன் பேரவையில் எழுந்து எங்களுக்கு ஆலோசனை கூறுவார். பாமக ராமதாஸ், அன்புமணி, சிவகுமார் ஆகியோர் கொடுக்கும் நிழல் பட்ஜெட்டின் அடிப்படையில் அவர்களது கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் பட்ஜெட் தயாரிப்போம். அனைத்து தரப்பினரும் எங்களைப் பாராட்டி பேசுவார்கள். அப்போது எங்களை பாராட்டியவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள்.

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் என்று சேர்த்திருக்கிறீர்கள். அதேபோல இந்த ஆட்சிக்கும் முட்டுக்கொடுக்கிறார்கள்" என்று பேசினார்.

'முட்டுக்கொடுத்தல்' வார்த்தை மட்டும் அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாகவும் பேரவைத் தலைவர் கூறினார்.

எனினும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடர்ந்து அந்த வார்த்தையைப் பயன்படுத்தி பேசினார். அவர் பேசும்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதல்வர் விஜய்யும் சிரித்தார்.

Summary

MRK Panneirselvam speech sparks a wave of laughter in the Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.