இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? என பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்,
"திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி சரியில்லை, கருப்பாக இருக்கிறது, பயன்படுத்த முடியவில்லை, ஆடு மாடுகளுக்கு தீவனமாக போடுகிறோம் என்று மக்கள் கூறினார்கள்.
தஞ்சாவூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்கூட கொள்முதல் நிலையங்கள் கட்சிக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஆட்சியில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
உடனே திமுக முன்னாள் அமைச்சர் சக்கரபாணி, "4,000 இடங்களில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் எங்கள் ஆட்சியில் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அரிசி ஆலைகள் உயர்த்தப்பட்டு பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்பட்டது" என்றார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,
"முதலில் 5 ஆண்டு கால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? இந்த ஒப்பீடு தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நியாயமானதா?
200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுக நம்பியது. எங்களுடைய முதல்வர், விவசாயி என்ற 3 முறை பதிவு செய்தார் முன்னாள் அமைச்சர்.
முதல்வர் விஜய் முதல்முதலாக பரந்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விவசாயிகளுக்காக என்னுடைய வாழ்க்கை இருக்கும் என்று சொன்னார்.
எங்களுடைய வாக்குறுதியில் கூறியபடி, விவசாயக் கடனை ரூ. 5,932 கோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 'விவசாயக் கடன் தள்ளுபடி' என்ற அறிவிப்பே இல்லை. முன்னாள் அமைச்சருக்கு அந்த எண்ணமே இல்லை. எங்களுடைய முதல்வர் சொன்னால் செய்வார்.
விவசாயிகள், விவசாயி சங்கங்களை அழைத்து முதல்வர் பேசி நெல், கரும்புக்கான விலையை உயர்த்தினார்.
ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டுருப்போமா? ரேஷன் அரிசியை முன்னாள் அமைச்சர் சக்கரபாணி சாப்பிட்டுள்ளாரா?
சன்ன ரக நெல்லுக்கு ரூ. 2,750 ஆக உயர்த்தி அந்த அந்த நெல்லை மக்களுக்கு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார் எங்கள் முதல்வர்.
ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.
கரும்பு உற்பத்தி 100% லிருந்து 30% ஆக குறைந்துள்ளது. அதனால் கரும்புக்கு ரூ. 4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும்" என்று கூறினார்.
பின், திமுக ஆட்சியில்தான் கருப்பு அரிசி ஒழிக்கப்பட்டது என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
திமுக எம்எல்ஏ எ.வ. வேலு, "வட மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது என்பது உண்மைதான். தயாரிப்பு விலையும் விற்பனை விலையும் ஒத்துப்போகவில்லை. வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது" என்றார்.
"கரும்பு உற்பத்தியில் இந்த ஆட்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறும்" என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
Summary
Have we ever cooked and eaten free ration rice at least once asks Aadhav Arjuna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமனாரிடம் கேளுங்கள்! அப்பாவ காணோம்! பேரவையில் ஆதவ் - உதயநிதி கடும் வாக்குவாதம்!

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா

பேட்மிண்டன் விளையாடிய ஆதவ் அர்ஜுனா - அன்புமணி!
கரூர் சம்பவம்! ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்கத்தக்கதல்ல: இந்திய கம்யூ.
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



