தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாமனாரிடம் கேளுங்கள்! அப்பாவ காணோம்! பேரவையில் ஆதவ் - உதயநிதி கடும் வாக்குவாதம்!

பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம்.

TN Assembly

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - TN Assembly

Published On :

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தின் போது, திமுக பொருளாளர் உள்பட அக்கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சாராய ஆலை நடத்துவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் உங்கள் மாமனார் லாட்டரி நிறுவனம் நடத்துகிறார் என்று கூச்சலிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, லாட்டரி நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக ரூ. 900 கோடி வாங்கியது ஏன்? தைரியம் இருந்தால் கூறுங்கள் எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக நன்கொடை வாங்கியது ஏன்? என அமைச்சர் கேள்வி எழுப்புகிறார். அந்த நிறுவனத்தை நடத்தும் அவரது மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, “அது உங்க அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும். அவரிடம்தான் கேட்க வேண்டும். உங்க அப்பாவ இங்க காணோம். வீட்டுக்கு சென்று அப்பாவிடம் கேளுங்கள். வாங்கியது ஏன் என்று அப்பா சொல்வார்” எனத் தெரிவித்தார்.

Summary

Heated argument exchange between Minister Aadhav Arjuna and TN LoP Udhayanidhi Stalin in the TN Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.