ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி

தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

News image

கே.பி. முனுசாமி.

Updated On :5 ஜூலை 2026, 4:12 pm IST

தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டியில், ஆதவ் அர்ஜுனா போல் கொள்கையின்றி பல கட்சிகளுக்கு ஓடுபவர்கள் அதிமுக தொண்டர்கள் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு ஓடுகாலியாகச் சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. அவருக்கென்று தனித்தன்மை கிடையாது.

புஸ்ஸி ஆனந்தை பார்க்கத்தான் ஆட்டுக்கூட்டம் போல அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் ஓடுகிறார்கள். அந்த கட்சித் தலைவரைப் பார்க்க அல்ல. அவர்கள் ஜாம்பவான்கள் இல்லை. சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள். ஆதவ் அர்ஜுனாவுக்கும் விஜயபாஸ்கருக்கும் வித்தியாசம் கிடையாது.

தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசி வந்தால் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அதிமுக தொண்டன்தான் ஜாம்பவான்கள். அந்த தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற ஓடுகாலிகள். ஜாம்பவான்கள் அனைவரும் அதிமுகவில்தான் உள்ளனர்.

லெட்டர் பேர்ட்டை வைத்து ஏமாற்றும் கூட்டம்தான் அங்கே சென்றுள்ளது. 31 ஆண்டுகாலம் அதிமுக கொண்டு வந்த திட்டங்களால்தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இயக்கம். கிட்டதட்ட 2 கோடி தொண்டர்களை உள்ளடக்கிய இயக்கம் என்றார்.

Summary

AIADMK deputy general secretary K. P. Munusamy has stated that legal action will be taken against Aadhav Arjuna if he continues to speak about AIADMK merging with TVK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.