மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: உயர் நீதிமன்றம் கருத்து

வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம் என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

CBI claims NEET-UG 2026 leak network used WhatsApp, Telegram and digital files to circulate question papers before exam

வினாத்தாள் கசிவு

Published On :

வினாத்தாள் கசிவு என்பது கொலையை விட மிகக் கொடூர குற்றம் என்று கூறியிருக்கும் உயர் நீதிமன்றம், சத்தீஸ்கர் பொதுப் பணித் துறை ஆணையத்தின் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்துள்ளது.

சத்தீஸ்கர் பொதுப் பணி ஆணைய (CGPSC) பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் ஜாமீன் மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசியவிடுவது லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடுவதால், அது கொலையை விடக் கொடூரமான குற்றம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2020-2022 காலகட்டத்தில் நடைபெற்ற பணியாளர் தேர்வு நடைமுறையின்போது சிஜிபிஎஸ்சி-யின் செயலாளராகப் பணியாற்றிய ஜீவன் கிஷோர் துருவ் (62), செப்டம்பர் 2025-ல் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையில், முறைகேடு நடந்த பணியாளர் தேர்வின் மூலம் துணை ஆட்சியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது மகன் சுமித் துருவும் இதில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவுக்கு உடந்தையாகச் செயல்படும் ஒருவர், அத்தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்துத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துடனும் வாழ்வாதாரத்துடனும் விளையாடுகிறார். இத்தகைய செயல் கொலைக் குற்றத்தை விடவும் கொடூரமானது; ஏனெனில், ஒருவரைக் கொல்வதன் மூலம் ஒரு குடும்பம் மட்டுமே பாதிக்கப்படுகிறது, ஆனால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைப்பதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டு ஜீவன் கிஷோர் துருவ் பிணை மனுவை நிராகரித்துள்ளது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சாதாரணமானவை என்று கூற முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Summary

Question paper leak is a crime far more heinous than murder: High Court observes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.