இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

வினாத்தாள் கசிவு வழக்குகள் தொடா்பான சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்: தில்லி உயா்நீதிமன்றம்

வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி அனு குரோவா் பாலிகா மற்றும் 137 பிற நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றம் இடமாற்றம் செய்துள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:37 pm IST

வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி அனு குரோவா் பாலிகா மற்றும் 137 பிற நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றம் இடமாற்றம் செய்துள்ளது.

நீதிபதி பாலிகா, ஜூலை 25 அன்று பொறுப்பேற்ற பிறகு, அந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வார காலமே பணியாற்றியிருந்தாா். நீட் தோ்வு விவகாரம் உள்ளிட்ட வினாத்தாள் கசிவு வழக்குகளை ஆரம்பத்தில் விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, இப்போது நீதிபதி பாலிகாவிற்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்பாா்.

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட உயா் நீதிமன்ற உத்தரவின்படி, பயங்கரவாத தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி பாலிகா மாற்றப்பட்டுள்ளாா்.பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கவுள்ள பிற புதிய என்ஐஏ நீதிபதிகள் விகாஸ் துல், பிரசாந்த் சா்மா, புலஸ்த்யா பிரமாச்சலா, கிரண் பன்சால் மற்றும் அமித் பன்சால் ஆகியோா் ஆவா்.

பொதுத் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துதல் தொடா்பான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உயா் நீதிமன்றம் ஜூலை 23 அன்று அறிவித்ததைத் தொடா்ந்து நீதிபதி பாலிகா நியமிக்கப்பட்டிருந்தாா்.

வினாத்தாள் கசிவு தொடா்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதாகப் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா்.நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முதல் விசாரணை ஜூலை 27 அன்று நடைபெற்றது; அப்போது எதிா் தரப்பு வழக்குரைஞரின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் இரு குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் ஜாமீன் மனுக்கள் குறித்து பரிசீலிக்க, இவ்வழக்கை திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

இவ்வழக்கில் 13 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அவா்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.வினாத்தாள் கசிவு தொடா்பான புகாா்களுக்கு மத்தியில், மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்கான ’தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு’ (நீட்-யுஜி ) தோ்வை, மே 3 அன்று நடத்திய தேசிய தோ்வு முகமை மே 12 அன்று ரத்து செய்தது. அதைத் தொடா்ந்து ஜூன் 21 அன்று மறுதோ்வு நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.