தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி! வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலி! தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான தாத்தா-பாட்டியையும் கொன்ற கொலையாளி!

News image

தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச் சூடு - AP

Updated On :7 ஆகஸ்ட் 2026, 12:54 pm IST

தாய்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 7) மாணவர் ஒருவர் நடததிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துப்பாக்கிச் சூடில் ஈடுபட்ட குற்றவாளி என 8 பேர் கொல்லப்பட்டதாக, காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர், அந்தப் பள்ளியின் சீருடையை அணிந்திருந்தார் என்றும், அவர் இந்தப் பள்ளியின் மாணவரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், பள்ளிக்கு வருவதற்கு முன்பு வீட்டில் தன்னுடைய தாத்தா - பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு நேராக பள்ளிக்கு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கியில் 26 சுற்றுகள் சுட்டிருப்பதும், சம்பவ இடத்தில் சுடப்படாமல் 34 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள டெப்சிரின் நோந்தபுரி பள்ளியில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் சிக்கி தப்பிய ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுததைப் பார்ப்பவர்கள் மனது கலங்குவதாக இருந்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்ததும் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர்கள் குழு, பள்ளி வளாகத்திலேயே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்கையும் முதலுதவி சிகிச்சையும் அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது பற்றி காவல்துறை கூறுகையில், கொல்லப்பட்ட எட்டு பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவார் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

8 person killed Thailand school shooting Killer murdered grandparents

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.