FOLLOW US

ON GOOGLE DISCOVER

வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்

அரசுப் பேருந்தில் தக்காளி வெற்றிக் கழகம் என்று பெயர்ப் பலகையில் ஓடிக் கொண்டிருந்தது குறித்து போக்குவரத்துக் கழகம் விளக்கம்

News image

போக்குவரத்துக் கழகம் விளக்கம் - from video grab

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:31 pm IST

சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில், 'தக்காளி வெற்றிக் கழகம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சென்னை அடையாறு பணிமனையிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் பெயர்ப் பலகையில் தக்காளி வெற்றிக் கழகம் என்ற வாசகம் மின்னொளியால் மிளிர்ந்து கொண்டிருந்தது.

இது பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

எப்படி, அரசுப் பேருந்தின் பெயர்ப் பலகையில் இவ்வாறு மிகப்பெரிய பிழை ஏற்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் பெயர்ப் பலகை விவகாரம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பார்வைக்குச் சென்றது. உடனடியாக எம்டிசி விளக்கம் கொடுத்துள்ளது. அதில், சில நாள்களுக்கு முன்பு, மர்ம நபர்களால் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டுவிட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட விளக்கத்தில், அந்தப் பேருந்தின் புகைப்படம் இணைக்கப்பட்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள பேருந்தின் வழித்தட விவர (Route Board) பலகை சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது.

இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது.

மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை செய்த மர்ம நபர்கள் யார், எப்போது இது நடந்தது என்பது போன்ற எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

Summary

thakkali Vetri kazhagam on gov bus What happened mtc reply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.