சென்னையில் 100 சிறப்புப் பேருந்துகள் நிறுத்தம் என்று பரவிய வதந்திக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "சென்னையில் 100 மகளிர் சிறப்புப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுவதாகவும், தற்பொழுது அந்தப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்றும் தெரிவித்துள்ளனர்.
Summary
Are special bus services for women in Chennai being discontinued?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








