முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

தண்டவாளத்தில் சேதம்... சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு!

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

News image

சென்னை புறநகர் ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 9:36 am IST

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் மேடை 1-ல் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் நோக்கி செல்லும் ரயில்கள் பயணிக்கும் பிரதான வழித்தடமாக இது உள்ளது. சமீபத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 41 புறநகர ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நெரிசல் மிகுந்த நேரத்தில் தற்போது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால், அந்தப் பகுதியில் மட்டும் ரயில்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், பல புறநகர் ரயில்கள் தாமதமாகியுள்ளது. தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Damage to the track... Train services between Chennai Beach and Tambaram disrupted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.