தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் பயணி குதித்தது பற்றி...

News image

கோப்புப்படம் - EPS

Updated On :24 ஜூன் 2026, 3:29 pm IST

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி ஒருவர் குதித்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்வேவின் பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.34 மணியளவில், ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையத்துக்குள் மெட்ரோ ரயில் நுழையும்போது, நடைமேடையில் இருந்த பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்ட ரயில் நிலைய ஊழியர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேற்சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனால், சென்னை மெட்ரோ பச்சை வழித்தடத்தில் சுமார் 10 நிமிடங்கள் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர், நிலைமை சீரானதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Summary

Commuter jumps onto Chennai Metro tracks - Services disrupted

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.