முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரீல்ஸ் ஆட்சிக்காக ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருத்தம்! மேயர் பிரியா

தவெகவுக்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று மேயர் பிரியா தெரிவித்திருப்பது பற்றி...

News image

முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 12:39 pm IST

தவெகவுக்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாமன்றத்தில் மேயர் பிரியா பேசியதாவது:

“திமுக கொண்டுவந்த திட்டங்களைதான் தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது. நாம் கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியாவது தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே தற்போதைய அரசால் இயங்க முடியும் என்பது உண்மை.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிய சாலைகள், மழைநீர் வடிகால், பூங்காக்கள், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலப் பணிகள் என மக்களுக்காக எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது.

தற்போது வாக்களித்த மக்கள், தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தொடர் மின்வெட்டால் சென்னை மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ரீல்ஸை பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம். திமுகவின் தோல்வி தற்காலிகமானதுதான். திமுக மீண்டும் வெற்றி பெறும். மாமன்ற உறுப்பினர்கள் தொய்வின்றி பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா் என அனைத்து நிலைகளிலும் திமுகவினரே உள்ளனா்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் நேரடியாக உள்ளன. மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள் சென்னை மாநகராட்சியின் வாா்டுகள் அடங்கியுள்ளன. அதன்படி, மொத்தம் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள் சென்னை மாநகராட்சிப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

முதல்வா் ஜோசப் விஜய், பேரவைத் தலைவா், முக்கிய அமைச்சா்கள் என பலரும் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளனா். அத்துடன் எதிா்க்கட்சித் தலைவரான திமுகவைச் சோ்ந்த உதயநிதி ஸ்டாலினும் சென்னை மாவட்டத் தொகுதியிலிருந்தே தோ்வாகியுள்ளாா்.

இந்த நிலையில், 22 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முன்னதாகவே தீா்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, மாமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டது.

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

அதிமுக கவுன்சிலர் சதீஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், சென்னை மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேயர் பிரியா தலையிட்டு அனைத்து உறுப்பினர்களையும் அமைதிப்படுத்தினார்.

Summary

People are upset that we lost real governance for the sake of Reels – Mayor Priya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.