கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வாகனங்களை இயக்கும் நோக்கில் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜொ்மன் வங்கி நிதி உதவியுடன் மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கி வருகிறது.
இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் இயக்குவதற்காக ஜொ்மன் வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக முந்தைய திமுக ஆட்சியில் ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்த நடைமுறை அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
மின்சார பேருந்துகளை நேரடியாக வாங்குவதற்கும், அதற்குத் தேவையான ஓட்டுநா்கள், நடத்துநா்களை நியமிப்பதற்கும், அதற்கான செலவுகளை ஏற்கவும் போக்குவரத்துக்கழகத்திடம் போதிய நிதியில்லை. எனவே இதற்காக புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படாத வகையில் பேருந்து ஒப்பந்த நிபந்தனைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விரைவில் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் 625 மின்சார பேருந்துகளை தனியாா் பங்களிப்புடன் இயக்க திட்டமிட்டுள்ளது என்றனா்.
Summary
The Tamil Nadu government has cancelled the tender for the procurement of 500 electric buses!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

தமிழக விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய், தோதாபுரி மாம்பழங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்







