திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

அரசுப்பணி ஆணை ரத்து! மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு: அமைச்சா் நிா்மல் குமாா்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியது பற்றி...

News image

அரசுப்பணி ஆணை ரத்து உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

Updated On :28 ஜூலை 2026, 4:08 am IST

கரூா் சம்பவத்தின்போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பணி நியமன அரசாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழங்கிய தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என சட்டத் துறை அமைச்சா் ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் நிா்மல் குமாரிடம் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து அவா் கூறியதாவது: உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் நகலை முழுமையாகப் பெற்று முழு விவரங்களும் சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்படும்.

தீா்ப்பின் சட்ட அம்சங்கள் குறித்து சட்ட வல்லுநா்களுடன் ஆராய்ந்த பின்னா், தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.