கரூர் கூட்டநெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று (ஜூலை 27) தெரிவித்தார்.
கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று ரத்து செய்தது.
அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க இயலாது என்றும், திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவலாமே? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், அரசுப் பேருந்து விபத்தில், பட்டாசு ஆலை விபத்தில் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் அரசுத் தரப்பிலும், தவெக தரப்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி, கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 31 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கியிருந்தார்.
Summary
Government jobs granted to families of Karur victims revoked; TVK plans to move the Supreme Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை

கரூர் பலி! 36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்?

கரூர் பலி! வழக்கின் தன்மையை அரசுப் பணி நீர்த்துப் போக செய்யும்! மார்க்சிய கம்யூ.
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |




