விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையினை வழங்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (ஜூலை 26) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), த/பெ. ரவீந்திரன், ராமச்சந்திரன் (வயது 40), த/பெ. ரவீந்திரன், இன்னாசிமுத்து (வயது 44), த/பெ. சிங்கராஜ் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த திரு. பாண்டித்துரை (வயது 35), த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has ordered the announcement of relief assistance for the families of those who lost their lives in an explosion at a firecracker factory in the Sengamalapatti area of Sivakasi Taluk, Virudhunagar district.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பட்டாசு ஆலை விபத்தில் பலி: மாணிக்கம் தாகூா் இரங்கல்

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் பலி

கண்ணீர் சிந்தியபடி பணி ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay




