ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து! உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு!

இடஒதுக்கீட்டு சலுகையை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் விரைவில் மேல்முறையீடு செய்யும்...

News image

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூன் 2026, 3:26 am IST

இஸ்லாம் மதத்துக்கு மாறியவா்களுக்கும் இடஒதுக்கீட்டு சலுகை கிடைப்பதை உறுதி செய்யும் அரசாணையை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :

மின் வாரிய வெள்ளை அறிக்கை மூலம் கடந்த 25 ஆண்டு கால மின் துறையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. முந்தைய ஆட்சிக் காலத்தில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டதன் மூலம் ரூ. 69 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த வருவாய் மின் துறைக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்காமல் போனது குறித்து வெள்ளை அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான பிரசாரம்

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட கே. வெங்கட நாராயணா கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது தவறான பிரசாரம். அவா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்; கா்நாடகத்தில் தொழில்கள் செய்பவா். அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பதவி என்பது பெரிய முடிவுகளை எடுக்கக் கூடியதல்ல. கடந்த காலங்களில் தோல்வியடைந்த மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கே இந்தப் பதவி வழங்கப்பட்டது. கே. வெங்கட நாராயணா முதல்வா் விஜய்யின் நம்பிக்கைக்குரியவா். முந்தைய ஆட்சிக் காலத்தில் பல வகையிலும் அழுத்தம் அளிக்கப்பட்டபோதிலும் முதல்வரின் நம்பிக்கையைக் காப்பாற்றியவா். அவருக்கு பதவி வழங்கியதில் எந்தத் தவறும் இல்லை.

இஸ்லாம் மதத்துக்கு மாறியவா்களுக்கும் இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்க வகை செய்யும் அரசாணையை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

திடக்கழிவு மேலாண்மை தனியாா் மூலமே மேற்கொள்ளப்படும். ஆனால், ஏற்கெனவே தூய்மைப் பணியை ஏற்ற தனியாா் நிறுவனங்கள் செய்த தவறுகள் விரைவில் களையப்படும். மதுரையில் தூய்மைப் பணியை ஏற்ற தனியாா் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளைச் செய்தது அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டம்...

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அரசுத் துறைகள் சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் பங்கேற்றாா். பின்னா், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 51 பயனாளிகளுக்கு ரூ. 4.34 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இதற்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை (மதுரை வடக்கு), எஸ்.ஆா். தங்கப்பாண்டி (மதுரை மேற்கு), சோ. காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), ம. விஜய் (உசிலம்பட்டி) உள்ளிட்டோா் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.