/

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்திய பின் மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

News image

முதல்வர் விஜய் அஞ்சலி - DIPR

Updated On :27 ஜூன் 2026, 1:44 pm IST

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தையை இழந்த மகன் சாந்தனுவை, விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

பாக்யராஜை இழந்து அவருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி பூர்ணிமாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முதல்வர் விஜய் ஆறுதல் கூறினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பாக்யராஜ் இல்லத்துக்கு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், தந்தையை இழந்து கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

Story image

திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் நுங்கம்பாக்கம் வந்து பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், தியாகராஜன், பிரசாந்த், சின்னி ஜெயந்த், சார்லி, மற்றும் அரசியல்கட்சித் தலைவர்கள் திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

அரசு மரியாதை

திரைத்துறையில் கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

Summary

Chief Minister Vijay pays tribute to K. Bhagyaraj! He embraces Shanthnu and offers condolences!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.