தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அமைச்சர் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர் பிரியா!

அமைச்சர் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியை மேயர் பிரியா புறக்கணித்தது பற்றி...

Mayor priya

அமைச்சர் வெங்கட்ரமணன், மேயர் ஆர். பிரியா - கோப்புப்படம்

Published On :

அமைச்சர் வெங்கட்ரமணன் பங்கேற்ற சென்னை மாநகராட்சியின் நிகழ்ச்சியை மேயர் ஆர். பிரியா இன்று புறக்கணித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், பெண்களுக்கான பிரத்யேகமாக நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த உடற்பயிற்சிக் கூடத்தை உணவுத் துறை அமைச்சரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வுமான வெங்கட்ரமணன் இன்று காலை திறந்துவைத்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவை, மேயர் பிரியா புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறப்பு விழாவின் போது, அமைச்சரால் திறக்கப்பட்ட கல்வெட்டில், நிகழ்ச்சியின் தலைமை மேயர் ஆர். பிரியா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெங்கட்ரமணன், “நாங்கள் எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறோம். சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு நிகழ்ச்சியை தவிர்க்கிறார்கள்” என்றார்.

ஏற்கெனவே தவெக நிர்வாகிகளுக்கும், மேயர் பிரியாவுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிகழ்வில், இன்றைய நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றதால் புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Mayor Priya boycotts Chennai Corporation event attended by the Minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.