திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கவர்ச்சியால்தான் தவெக வென்றது: சென்னை மேயர்

தமிழகத்தில் தவெக அரசு எதற்கெடுத்தாலும் திமுகவையே குறைசொல்வதாக சென்னை மேயர் பிரியா விமர்சனம்

News image

முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:33 pm IST

தமிழகத்தில் தவெக அரசு எதற்கெடுத்தாலும் திமுகவையே குறைசொல்வதாக சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுகவின் புத்தெழுச்சி நாள் நிகழ்ச்சியில் மேயர் பிரியா பேசியதாவது, "இன்று பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கூட்டம் இருக்கின்றனர். யாரென்று உங்களுக்கே தெரியும்.

கவர்ச்சி இல்லையென்றால், வேறு எதனை வைத்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? களத்தில் என்ன வேலை செய்தீர்கள்?

அவர்கள்தான் (தவெக) ஆட்சியில் இருக்கின்றனர் என்பதுகூட தெரியாமல், இன்றைக்கும் எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம் என சொல்கின்றனர்.

அவர்களின் அமைச்சர்களோ எம்எல்ஏ-க்களோ யாருமே எந்தவித பொறுப்புக் கூறலும் எடுத்துக் கொள்வதில்லை. இதுதான் அவர்களின் ஆட்சி.

கரோனா தொற்றுக் காலத்தில்கூட பொறுப்பேற்றுக் கொண்டு, உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும், உரிய தீர்வுகாண வேண்டும் என்றும் முன்னேற்பாடுகளுடன் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்றார்.

ஆனால், இன்று ஆட்சியமைத்திருந்தும் 'எங்களுக்குத் தெரியாது திமுகவினர்தான், எங்களுக்குத் தெரியாது திமுகவினர்தான்' என்று சொல்கின்றனர். அப்படியென்றால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்? ஏன் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளீர்கள்?

ஆட்சி மற்றும் அதிகாரத்திலிருந்தும் திமுகவை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

Summary

Chennai Mayor Priya criticizes the TVK government for blaming the DMK for everything

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.