/

ஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?

சென்னை மெட்ரோவில் ஜூலை மாதம் 1.06 கோடி பேர் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது பற்றி..

News image

மெட்ரோ ரயில் - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:04 pm IST

2026 ஜூலை மாதத்தில் 1.06 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுபோல, புதிதாக அல்லது முதல் முறையாக மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள், டிக்கெட் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்காமல், சில பிரத்யேக முறைகளில் டிக்கெட் எடுத்தால் 20 சதவிகிதம் கட்டணத் தள்ளுபடி இருப்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியைவழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் மெட்ரோஇரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 24.07.2026 அன்று 3,84,412 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2026, ஜூலை மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை)பயன்படுத்தி 55,87,494 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி (Single Journey Paper Q) 19,66,202; ஆன்லைன் க்யுஆர் குறியீடு – 1,47,760; ஸ்டாட்டிக் க்யுஆர் குறியீடு 2,24,701; வாட்ஸ்ஆப் மூலம் - 4,51,715; பேடிஎம் 2,99,228; ஓஎன்டிசி – 12,68,411; போன்பே – 2,84,121; செல்போன் செயலி (SVP) 95,430; சென்னை ஒன் செயலி (Chennai One App) – 2,98,702; எச்சிஎல் க்யூஆர் (HCL 50 Year Celebration Music Concert Event QR) – 13,883 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டிஜிட்டல் எஸ்விபி, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, வாட்ஸ்ஆப் - (+91 83000 86000), பேடிஎன், போன் பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடிகிடையாது.

மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்புநல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துக் கொண்டுள்ளது.

மாதந்தோறும் சென்னை மெட்ரோவில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Summary

1.06 crore people traveled on the Chennai Metro in July! Do you know about the 20% fare discount?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.